ஐராவதேசுவரர் கோயில்( தாராசுரம்)

Language : Tamil | Temple | Audios

General Information

கோவில் நேரம் :

 • காலை 6:00மணி முதல் மாலை 8மணி வரை கோவில் வளாகம் திறந்திருக்கும்.
 • மூலவர் சந்நிதி மட்டும் மதியம் 12:00மணிக்கு மூடப்பட்டு மாலை 4:00 மணிக்கு திறக்கப்படும்.
 • அனைத்து நாட்களும் திறந்திருக்கும்

நுழைவுக்கட்டணம் :

நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.

ஆடைக் குறிப்பு :

குறிப்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் கோவில் என்பதை மனதில் இருத்தி ஆடை அணிதல் நலம்.

Facilities

குடிநீர் :

கோவில் வளாகத்தின் உள்ளே குடிநீர் வசதி இல்லை. ஆனால் நுழைவு வாயில் அருகில் உள்ள சிறு கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கும்  .

கழிப்பறை வசதி :

கோவிலுக்கு எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தின் அருகில் கட்டண கழிப்பறை வசதி உள்ளது. கோவிலின் உள்ளே கழிப்பறை வசதி கிடையாது.

காலணி வைக்கும் இடம் :

நுழைவு வாயில் அருகிலேயே காலணி வைக்கும் இடம் இருக்கிறது

வாகனங்கள் நிறுத்துமிடம் :

கோவில் வளாகத்தின் எதிரேயே வாகனங்கள் நிறுத்த நிறைய இடம் இருக்கிறது. கட்டணம் செலுத்தி வாகனங்களை அங்கு நிறுத்தலாம்.

Food

இங்கு உணவகங்கள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. கும்பகோணத்திற்கு தான் செல்ல வேண்டும்.

கும்பகோணத்தில் உள்ள கீழ்கண்ட உணவகங்க ளில் தமிழ்நாட்டின் இலை போட்டு பரிமாறும் இலை சாப்பாடும், சிற்றுண்டிகளும் கிடைக்கும்.

 • ஹோட்டல் வெங்கடரமணா
 • ஸ்ரீ மங்களாம்பிகா விலாஸ் காபி மற்றும் டிபன் சென்டர்
 • மாமி மெஸ்

Checklist

 • வெம்மையான சீதோஷ்ணதிற்கேற்ற  உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்
 • வெம்மையான சீதோஷ்ணதிற்கேற்ற  உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்
 • பைனாகுலர் எடுத்து செல்வது நலம். கோபுரங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் பார்க்க இது உதவும்.
 • உங்களுடைய இயர்ஃபோன், ஹெட்ஃபோன் கையோடு ஏடுத்து செல்லுங்கள்
 • தங்களுடைய மொபைல் உடன் பவர்பேங்க் எடுத்துச் செல்லலாம்

The Basics

நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும். </SubDescription>நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

History

தென்னகத்திலுள்ள UNESCO உலகப் பாரம்பர்ய சின்னங்கள் மூன்றில் ஒன்று இந்த ஐராவதீஸ்வரர் கோவில். மற்ற இரண்டும் தஞ்சை பெரிய கோவிலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழேஸ்வரர் கோவிலும் ஆகும். இந்த மூன்றில் இது தான் அளவில் சிறியது. ஆனால் அளவில் விட்டதை, சிற்பக்கலை சிறப்பில் ஈடுகட்டிவிட்டது இந்த கோவில். இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் நம்மை மெய்மறந்து போக வைக்கக்கூடியவை. </SubDescription>தென்னகத்திலுள்ள UNESCO உலகப் பாரம்பர்ய சின்னங்கள் மூன்றில் ஒன்று இந்த ஐராவதீஸ்வரர் கோவில். மற்ற இரண்டும் தஞ்சை பெரிய கோவிலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழேஸ்வரர் கோவிலும் ஆகும். இந்த மூன்றில் இது தான் அளவில் சிறியது. ஆனால் அளவில் விட்டதை, சிற்பக்கலை சிறப்பில் ஈடுகட்டிவிட்டது இந்த கோவில். இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் நம்மை மெய்மறந்து போக வைக்கக்கூடியவை.