கங்கைகொண்ட சோழபுரம்

Language : Tamil | Temple | Audios

General Information

கோவில் நேரம் :

  • காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00மணி வரை
  • மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
  • அனைத்து நாட்களும் திறந்திருக்கும்

நுழைவுக்கட்டணம் :

நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.

Facilities

குடிநீர் :

கோவில் வளாகத்தின் உள்ளே குடிநீர் வசதி இல்லை. ஆனால் நுழைவு வாயில் அருகில் உள்ள சிறு கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கும்  .

கழிப்பறை வசதி :

கோவிலுக்கு எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தின் அருகில் கட்டண கழிப்பறை வசதி உள்ளது. கோவிலின் உள்ளே கழிப்பறை வசதி கிடையாது.

காலணி வைக்கும் இடம் :

முதலாம் நுழைவு வாயில் அருகிலேயே காலணி வைக்கும் இடம் இருக்கிறது

வாகனங்கள் நிறுத்துமிடம் :

கோவில் வளாகத்தின் எதிரேயே வாகனங்கள் நிறுத்த நிறைய இடம் இருக்கிறது. கட்டணம் செலுத்தி வாகனங்களை அங்கு நிறுத்தலாம்.

Food

இங்கு உணவகங்கள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. சுவாமிமலைக்கோ அல்லது கும்பகோணத்துக்கோ தான் செல்ல வேண்டும்.

Checklist

  • இங்கு வெம்மையான சீதோஷ்ணம் ஆதலால் அதற்கேற்ற உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்.
  • இங்கு வெம்மையான சீதோஷ்ணம் ஆதலால் அதற்கேற்ற உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்.
  • பைனாகுலர் எடுத்து செல்வது நலம். கோபுரங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் பார்க்க இது உதவும்.
  • உங்களுடைய இயர்ஃபோன், ஹெட்ஃபோன் கையோடு ஏடுத்து செல்லுங்கள்
  • தங்களுடைய மொபைல் உடன் பவர்பேங்க் எடுத்துச் செல்லலாம்
  • அதிக நேரம் உங்கள் மொபைல் பவர் இருக்க வேண்டுமானால் உங்கள் போனில் மொபைல் டேட்டா நெட்வொர்கை அணைத்து வைக்கவும். இந்த ஆப் -ஐ நீங்கள் ஆஃப்லைனில்  உபயோகிக்க முடியும்.

The Basics

நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும். </SubDescription>நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

History

கங்கைக்கரை தேசங்களை வென்றதை குறிக்கும் வகையிலும் அந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் ராஜேந்திர சோழன் புதியதாக ஒரு நகரத்தையே உருவாக்கி அதற்க்கு கங்கைகொண்ட சோழபுரம்னு பெயரிட்டார்.  சோழர்களின் ஒட்டுமொத்த தலைநகரமா அந்த நகரத்தை மாத்தினார். அந்த நகரத்தின் மையத்தில் சிவபெருமானுக்காக ஒரு அற்புதமான கோவிலை நிர்மாணித்தார். இங்குள்ள சிவபெருமான் கங்கைகொண்ட சோழேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக்கோவில் பார்ப்பதற்கு தஞ்சை பெரிய கோவில் மாதிரி இருந்தாலும், அளவில் அதைவிட சிறியது. </SubDescription> கங்கைக்கரை தேசங்களை வென்றதை குறிக்கும் வகையிலும் அந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் ராஜேந்திர சோழன் புதியதாக ஒரு நகரத்தையே உருவாக்கி அதற்க்கு கங்கைகொண்ட சோழபுரம்னு பெயரிட்டார்.  சோழர்களின் ஒட்டுமொத்த தலைநகரமா அந்த நகரத்தை மாத்தினார். அந்த நகரத்தின் மையத்தில் சிவபெருமானுக்காக ஒரு அற்புதமான கோவிலை நிர்மாணித்தார். இங்குள்ள சிவபெருமான் கங்கைகொண்ட சோழேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக்கோவில் பார்ப்பதற்கு தஞ்சை பெரிய கோவில் மாதிரி இருந்தாலும், அளவில் அதைவிட சிறியது.