தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

Language : Tamil | Temple | Audios

General Information

கோவில் நேரம்:

 • காலை 6:30 மணி முதல்
 • இரவு 8:30 மணி வரை
 • அனைத்து நாட்களும் திறந்திருக்கும்

நுழைவுக்கட்டணம்:

நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.

ஆடைக் குறிப்பு:

குறிப்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் கோவில் என்பதை மனதில் இருத்தி ஆடை அணிதல் நலம்.

எடுத்துச்செல்லக் கூடியது:

 • புகைப்படக்கருவி (கேமரா), கையில் எடுத்துச்செல்லக்கூடிய வீடியோ கேமரா
 • கைபேசி (செல்போன்)
 • குடிநீர்

அனுமதி மறுக்கப்பட்டவை

உணவுப்பண்டங்களை எடுத்துச்செல்வதை தவிர்க்கவும்

Facilities

குடிநீர்:

கோவில் வளாகத்தின் உள்ளே குடிநீர் கிடைக்கும்.

கழிப்பறை வசதி:

கோவில் வளாகத்தின் உள்ளே கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலணி வைக்கும் இடம்:

முதலாம் நுழைவு வாயில் அருகிலேயே காலணி வைக்கும் இடம் இருக்கிறது

வாகனங்கள் நிறுத்துமிடம்:

கோவில் வளாகத்தின் எதிரேயே வாகனங்கள் நிறுத்த நிறைய இடம் இருக்கிறது. கட்டணம் செலுத்தி வாகனங்களை அங்கு நிறுத்தலாம்.

Food

தென்னிந்திய உணவகங்கள்:

 • ஸ்ரீ ஆரிய பவன்
 • ஹோட்டல் ஞானம்

Checklist

 • சுற்றுலா விவரங்கள் தஞ்சை நகர சுற்றுலா இணையத்தளத்தில் கிடைக்கும் – http://tour.tmssmlibrary.com
 • தஞ்சையில் வெம்மையான சீதோஷ்ணம் ஆதலால் அதற்கேற்ற உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்.
 • உங்களுடைய இயர்ஃபோன், ஹெட்ஃபோன் கையோடு ஏடுத்து செல்லுங்கள்
 • தங்களுடைய மொபைல் உடன் பவர்பேங்க் எடுத்துச் செல்லலாம்
 • அதிக நேரம் உங்கள் மொபைல் பவர் இருக்க வேண்டுமானால் உங்கள் போனில் மொபைல் டேட்டா நெட்வொர்கை அணைத்து வைக்கவும். இந்த ஆப் -ஐ நீங்கள் ஆஃப்லைனில் உபயோகிக்க முடியும்.

The Basics

நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

History

தன்னிகரற்ற கட்டிடக்கலை அற்புதம். அது தான் பிரகதீஸ்வரர் கோவில்.

ஆதிபகவன் சிவபெருமானுக்காக 1000 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட கோவில் இது. இதன் கட்டுமான காலத்தில கட்டப்பட்ட எல்லா கோவில்களை விடவும் பல மடங்கு பெரிய கோவில். இங்க இருக்கற மூலவர் லிங்கம் 12.5 அடி உயரம். சராசரியா சிவலிங்கம் 2அடிக்குள்ள தான் அமைக்கப்பட்டிருக்கும். இது சோழர்களின் ப்ரும்மாண்டத்திற்கு ஒரு சான்று.