மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

Language : Tamil | Temple | Audios

General Information

கோவில் நேரம் : கலை 5.00மனி முதல் 12.30மனி வரை / மாலை 4.00மனி முதல் 10.00 வரை.

நுழைவுகட்டணம் : கட்டணம் தேவை இல்லை.

ஆடை குறியீடு :

வாடிக்கையான உடைகள் : பேண்ட், ஷர்ட், டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் , பாரம்பரிய ஆடைகள் , புடவை , சல்வார் துப்பட்டாவுடன்.

தவிர்க்கக்கூடிய உடைகள்: லுங்கி, தொப்பி, அரைப்பேண்ட, கை இல்லாத உடைகள்.

எடுத்துச் செல்லக் கூடியது :

கேமரா : கேமரா கோவிலின் உள்ளே எடுத்து செல்லலாம்.ஆனால் சன்னதிகுள்ளே புகைப்படம் எடுக்கு அனுமதி இல்லை.

கைபேசி: சைலன்ட் அல்லது வைப்ரேட் மோடில் வைக்கவும். உங்கள் கைபேசியில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்குத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

குடிநீர்: கோவிலின் உள்ளே கிடைக்கும். நீங்களும் எடுத்துச் செல்லாம்.

அனுமதி இல்லாதது :

காலணிகள் : எல்லா கோபுர வாசல்களிலும் இலவச காலணிகள் வைக்கும் இடம் உள்ளது.

தின்பண்டங்கள் : தின்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கோவிலின் உள்ளே பிரசாதம் கிடைக்கும்.

Facilities

கழிப்பறை – கட்டண பொது கழிப்பறை :

வடக்கு ஆவணி மூல வீதி.

வடக்கு ஆவணி மூல வீதி.

தெற்கு கோபுர எதிரில்.

பொருள் வைப்பரை :

பாதுகாப்பான பொருள் வைப்பறை எல்லா கோபுர வாசலிலும் காலணி வைக்கும் இடத்தில் உள்ளது.

பார்க்கிங் :

எல்லிஸ் நகர் கார் பார்க், பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகே உள்ளது. அங்கிருந்து கோவிலுக்கு வர தனிப்பேரூந்துகள் உள்ளன.

 

Food

தென் இந்திய உணவு :

1. மாடர்ன் உணவு விடுதி – மேற்கு ஆவணித் தெரு (YMCA பின்புறம்)

2. கோபு ஐய்யங்கார் உணவு விடுதி – மேற்கு சித்திரைத் தெரு. இது கோவில் அருகே உள்ளது.

வட இந்திய உணவு :

1. நியூ ஆரிய பவன் – மேற்கு மாசித் தெரு.

2. ஸ்ரீ மோகன் போஜனாலயா – மேற்கு கோபுரத் தெரு (ஹோட்டல் டெம்பிள் வியூ எதிரில்).

வெளிநாட்டு உணவு :

1. Domino’s Pizza , கே.கே.நகர்.

2. The Chopsticks – சைனீஸ் உணவு, கே.கே.நகர்.

3. Phil ‘s Bistro – இத்தாலியன் /அமெரிக்கன் உணவு, கே.கே.நகர்.

 

Checklist

  • கோவில் நடப்புகளை தெரிந்து கொள்ள கோவிலின் இணையதளம் http://www.maduraimeenakshi.org/
  • கோவிலில் திருவிழா காலங்களில், அதிகமான பக்தர்கள் வருவார்கள். நீங்கள் ஒரு சாதாரண யாத்ரீகரானால் வருடத்தில் எந்த காலமும் வந்து கண்டுகளிக்கலாம்.
  • ஆயிரங்கால் மண்டபம் செல்வதற்குக் கட்டணம் – ரூ 5/-
  • உங்களுடைய இயர்ஃபோன், ஹெட்ஃபோன் கையோடு எடுத்துச் செல்லுங்கள்
  • தங்களுடைய மொபைல் உடன் பவர்பேங்க் எடுத்துச் செல்லலாம்அ
  • திக நேரம் உங்கள் மொபைல் பவர் இருக்க வேண்டுமானால் உங்கள் போனில் மொபைல் டேட்டா நெட்வொர்கை அணைத்து வைக்கவும். இந்த ஆப் -ஐ நீங்கள் ஆஃப்லைனில் உபயோகிக்க முடியும்.

The Basics

இனிமையைக் குறிக்கும் மதுரம் என்ற சொல்லே மதுரை ஆனது. மதுரை 2500 வருடங்களுக்கு மேற்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த ஒரு பழைமையான நகரம். இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஐந்து ஊர்களில் மதுரையும் ஒன்று.

 

History

பாண்டியர்களின் வம்சம் தென் இந்தியாவை ஆண்ட மூன்று பெரிய ராஜவம்சங்களில் ஒன்றாகும் . இவர்கள் 1000 வருடங்களுக்கும் மேல் தென்னாட்டை ஆண்டவர்கள். சொல்லப் போனால், இந்திய வரலாற்றிலேயே பாண்டியர்களின் வம்சம் தான் நீண்ட காலம் அரசாண்டவர்கள் .

இந்த வம்சத்தின் பொற்காலம் என்றால், அது மாறவர்மன் சுந்தர பாண்டியனும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும் அரசாண்ட காலம் தான் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மேற்கில் ஆந்திரா, கலிங்கா (ஓரிசா) வரையிலும், தெற்கில் ஸ்ரீலங்கா வரையிலும் தங்கள் ஆட்சியை விரிவு படுத்தினார்கள். மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள், சுந்தர பாண்டியனுக்கு உதவ வந்த மாலிக் கபூரின் சதிக்கு மதுரையைத் தொலைத்தார்கள். அதன்பின் பாண்டியர்கள், தென்காசியை தலைநகராகக் கொண்டு மேலும் 300 வருடங்கள் தென்னாட்டை ஆண்டார்கள் .