அரங்கநாத சுவாமி கோயில் (ஸ்ரீரங்கம்)

Language : Tamil | Temple | Audios

General Information

கோவில் நேரம் :

காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

மாலை 2:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

அனைத்து நாட்களும் திறந்திருக்கும்.

நுழைவுக்கட்டணம் :

நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.

ஆடைக் குறிப்பு :

குறிப்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் கோவில் என்பதை மனதில் இருத்தி ஆடை அணிதல் நலம்.

எடுத்துச்செல்லக் கூடியது :

புகைப்படக்கருவி (கேமரா), கையில் எடுத்துச்செல்லக்கூடிய வீடியோ கேமரா, கைபேசி (செல்போன்) – இவையனைத்தும் பிரகாரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். சந்நிதிகளுக்கு அருகே இவற்றை உபயோகிக்க அனுமதி இல்லை.

குடிநீர்

 

Facilities

குடிநீர் :

கோவில் உள்ளேயே குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்பு பலகையை அங்கங்கு பார்க்கலாம். குடிநீர் பாட்டில்களும் விலைக்கு கிடைக்கின்றன.

கழிப்பறை வசதி :

மிகவும் பரபரப்பாக இயங்கும் கோவில் என்பதால் கோவில்வளாகத்தின் உள்ளே கழிப்பறை வசதிகள் கிடையாது. கோவில் நுழைவு வாசலுக்கு சற்று வெளியே பல கட்டண மற்றும் இலவச கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலணி வைக்கும் இடம் :

நுழைவு வாயில் அருகிலேயே இலவசமாக காலணி வைக்கும் இடம் இருக்கிறது . இதை குறிக்கும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்துமிடம் :

கிழக்கு மற்றும் மேற்கு உத்திர வீதியில் கார் நிறுத்துமிடம் இருக்கிறது. இது கோவிலுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் காலணி வைக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கிறது.

Food

பெருமாள் கோவிலுக்கு வந்துவிட்டு புளியோதரை உண்ணாமல் போகலாமா? இந்த கோவிலில் புளியோதரை, தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் வடை மிகவும் பிரசித்தம். கோவிலின் பிரசாத விற்பனையிடங்களில் இவை கிடைக்கும். அது தவிர கோவிலிலேயே குறிப்பிட்ட நேரங்களில் அன்னதானம் நடைபெறும்.

இவையிரண்டும் தவிர கோவிலுக்கு வெளியே பல்வேறு வகை உணவுகள் கிடைக்கக்கூடிய நிறைய உணவகங்கள் இருக்கின்றன.

Checklist

  • வெம்மையான சீதோஷ்ணதிற்கேற்ற  உடை அணிவது நல்லது. பார்வை நேரம் காலை 9 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்கு மேலாகவோ இருப்பது சௌகர்யமாக இருக்கும்.
  • காலுறை அணிந்து செல்வது உசிதம். வெய்யில் ஏற ஏற கருங்கல் தரை சூடேறுவதால் காலுறை சற்று உதவியாக இருக்கும். கோவில் தரை முழுவதுமே கருங்கல் தளம் தான்.
  •  பைனாகுலர் எடுத்து செல்வது நலம். கோபுரங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் பார்க்க இது உதவும்.
  • உங்களுடைய இயர்ஃபோன், ஹெட்ஃபோன் கையோடு ஏடுத்து செல்லுங்கள்
  • தங்களுடைய மொபைல் உடன் பவர்பேங்க் எடுத்துச் செல்லலாம்
  •  அதிக நேரம் உங்கள் மொபைல் பவர் இருக்க வேண்டுமானால் உங்கள் போனில் மொபைல் டேட்டா நெட்வொர்கை அணைத்து வைக்கவும். இந்த ஆப் -ஐ நீங்கள் ஆஃப்லைனில்  உபயோகிக்க முடியும்.

The Basics

நம் நாட்டில் அநேகமாக எல்லா பாரம்பர்ய சின்னங்களும், ஆன்மிகம், கடவுள் மற்றும் புராணக்கதைகள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். எனவே, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நம் ரசனைக்கும் இந்த பொக்கிஷங்களை நமக்கு அளித்த கலைஞர்களின் திறனை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

History

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடம் ஆற்றுக்கும் நடுவில் ஒரு தீவா அமைஞ்சிருக்கறது தான் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கநாதரின் இருப்பிடம். இதுக்கு இன்னொரு பெரும் உண்டு. அது தான் பூலோக வைகுண்டம். அதாவது பூலோகத்தில் உள்ள அந்த மஹாவிஷ்ணுவின் இருப்பிடம்.

ஸ்ரீரங்கம் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். அஷ்டாக்ஷர க்ஷேத்திரம்னு சொல்லப்படற ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஸ்ரீரங்கம் முதலாவதாகும். இதுக்கு தானாக அதாவது ஸ்வயமாக தோன்றிய க்ஷேத்திரம்னு அர்த்தம்.